|| ஸ்ரீ குருப்யோ நம: ||
ஸதாசயாத்த தண்டகம் விகாசிவக்த்ர பங்கஜம்
ஸதாஸ்ருதிச்ரவ ப்ரியம் ச்ருதிப்ரசாரதத்பரம் |
சிவாவதார சங்கர ப்ரதீஷ்டித ப்ரபீடகம்
ஸசிஷ்ய ஸேவ்ய சந்த்ர சேகரேந்த்ர தேசிகம் பஜே ||
எப்பொழுதும் கையில் தண்டத்தை உடையவரும், ப்ரஸன்னமான தாமரை போன்ற முகத்தை உடையவரும், எப்பொழுதும் வேத ஒலியைக் கேட்க ப்ரியமுள்ளவரும், வேதத்தை ப்ரசாரம் செய்வதில் விருப்பமுள்ளவரும் பரசிவ அவதார ஸ்ரீ சங்கராசார்யரால் மேன்மையுடன் ப்ரதிஷ்டை I செய்யப்பட்ட (காமகோடி) பீடத்தை அலங்கரிப்பவருமான சிஷ்யருடன் சேர்ந்து உபாசிக்கத் தகுந்த ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸத்குருவை ஸேவிக்கின்றேன்.
க்ருபா கடாக்ஷ வீக்ஷணைஸ் ஸமஸ்த்ததாபஹாரிணம்
சிகாதி தாரிபாடவ ப்ரியம் ஜகத்குரோர் குரும் |
அஹம் மமேதி பாநஹீன மானஸம் க்ருபா நிதிம்
ஸசிஷ்யஸேவ்ய சந்த்ரசேகரேந்த்ர தேசிகம் பஜே ||
க்ருபை கூர்ந்த கடைக்கண் பார்வையால் உலகத்தாரின் தாப்த்ரயத்தை நாசம் செய்பவரும், குடுமி, பூணூல், பஞ்சகச்சம் இவைகளை ஒழுங்காகத் தரிக்கின்ற அந்தணர்களிடத்தில் மிக அன்பு காட்டுகின்றவரும் உலகத்தை குருவாகவுடையவனுக்கு குருவானவரும், நான், என்னுடையது என்ற தோற்றமற்ற உள்ளத்தையுடையவரும், க்ருபைக்கிருப்பிடமானவருமான சிஷ்யருடன் சேர்ந்து உபாஸிக்கத் தகுந்த ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸத்குருவை உபாசிக்கின்றேன்.
யமாதியோக ஸாத நாதி போதகம் குணோததிம்
ஸுராலயேஷு பிக்ஷுமர்த்ய பக்ததான தோஷிணம் |
ஸுகோஷ்ட முக்யதேசவாஸ லோலுபம் ஸபாப்ரியம்
ஸசிஷ்யஸேவ்ய சந்த்ரசேகரேந்த்ர தேசிகம் பஜே ||
யமம் முதலிய (யமம்-நியமம்-ஆஸனாம்-ப்ராணாயாமம்-ப்ரத்யாஹாரம்-தாரணா-த்யான-ஸமாதி) யோக சாதனங்களை உப்தேசிக்கின்றவரும், ஸத்குணக்கடலும், சிவாலயங்களில் பிச்சைக்காரர்களான ஏழைகளுக்கு பட்டை சாதம் கொடுக்கச் செய்து அதனால் மிக சந்தோஷமடைந்தவரும், அழகான பசுமாடுகளின் தொழுவில் தங்குவதில் மிக விருப்பமுள்ளவரும், வித்வத் ஸபைகளில் ப்ரியமுள்ளவரும், சிஷ்யரோடு சேர்ந்து உபாசிக்கத் தகுந்த ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸத்குருவை உபாஸிக்கின்றேன்.
ஸமஸ்த்த பீட முக்ய காமகோடிபீட பாஸ்வரம்
ஸமஸ்த்தலோக து:க நாசநே ஸதோத்யதம் யதிம் |
ருகாதி வேத பாலநாய விப்ரபாலநே ரதம்
ஸசிஷ்யஸேவ்ய சந்த்ரசேகரேந்த்ர தேசிகம் பஜே ||
உலகத்திலுள்ள எல்லா பீடங்களுக்கும் முக்கியமான காமகோடி பீடத்தில் ப்ரகாசித்துக் கொண்டிருப்பவரும், எல்லா மக்களின் துக்கத்தையும் தொலைப்பதில் எப்பொழுதும் முயற்சியுள்ளவரும், மனதை அடக்கினவரும், ரிக் வேதம் முதலிய வேதங்களை அபிவிருத்தி செய்வதற்காக அந்தணர்களைக் காப்பாற்றுவதில் ஆஸக்தியுள்ளவருமான சிஷ்யருடன் சேர்ந்து உபாஸிக்கத் தகுந்த ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸத்குருவை உபாசிக்கின்றேன்.
பதாசரன் முதாசரன் ஸதாசரன் ஜகத்குரு:
ஸமஸ்த்த பக்தகாமனாய ஸம்விபாதி யோகிராட் |
ஸ்ருதேஸ்ருதிம் ஸுபோதயந்த மாதரேண சர்மதம்
ஸசிஷ்யஸேவ்ய சந்த்ரசேகரேந்த்ர தேசிகம் பஜே ||
எல்லா பக்தர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக கால்நடையாக ஸந்தோஷத்துடன் ஸஞ்சாரம் செய்து கொண்டு யோகீந்த்ரர்களான ஜகத்குரு ஆச்சார்யாள் விசேஷமாக ப்ரகாசித்து வருகிறார்காள். மக்களுக்கு அறிவை உண்டுபண்ண வேதமார்க்கத்தை ஆதரவோடு உபதேசிக்கின்றவரும், க்ஷேமத்தை நல்குகின்றவருமான சிஷ்யருடன் சேர்ந்து உபாஸிக்கத் தகுந்த ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸத்குருவை உபாஸிக்கின்றேன்.
ஜகத் குரோஸ்து பஞ்சரத்ன மாதரேண ஸர்வதம்
குரோர் திநே விமித்ரபே ஸுஸம்ஸ்மரன் குரோ:பதௌ |
ப்ரஜல்பதா மரோகதா ஸுபுத்திதா ஸுஸூனுதா
சுமித்ரதா ஸுஜீவிதா ஸுசீலதா சஸங்கதா ||
ஸ்ரீ ஜகத்குருவின் பேரில் இயற்றப்பட்ட எல்லாவற்றையுமளிக்கத் தக்க இந்த பஞ்சரத்ன ஸ்தோத்திரத்தை குருவாரத்திலும், அனுஷ நக்ஷத்ரத்தன்றும் ஸ்ரீ குரு பாதங்களை நன்றாக த்யானம் செய்து பாராயணம் செய்கின்றவர்களுக்கு எல்லாவித ரோகங்களும் (பிணிகளும்) வராமலிருப்பதுடன் நல்ல புத்தியுடனான ஸத்புத்ரனும் ஸன்மித்ரனும் நல்வாழிக்கையும், நல்ல ஸ்வபாவமும் கூடி வரும்.
பெரியவா சரணம்!

Shivaaya Namaha.
ReplyDeleteGrea8 contribution to Mahaperiyava devotees ji.
Hats off !
Periyava Charanam.