|| ஸ்ரீ குருப்யோ நம: ||
ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடத்தில் (1983ம்
வருடம் மே மாதம் 29ம் தேதி) பட்டம் ஏற்ற
(15 வயது) ஸ்ரீ சங்கர விஜயேந்தேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்,
ஸ்ரீ பரமாசார்யாளின் பேரில் இயற்றிய குரு ஸ்துதி.
ஸ்ரீ பரமாசார்யாளின் பேரில் இயற்றிய குரு ஸ்துதி.
ச்ருதி ஸ்ம்ருதி புராணோக்த தர்மமார்கர தம் குரும் |
பக்தாநாம் ஹித வக்தாரம் நமஸ்யே சித்தசுத்தயே ||
வேதங்கள், ஸ்மிருதிகளில் கூறப்பட்ட அனைத்து தர்மங்களையும் அனுஷ்டித்துக்
காட்டி ஈடுபடுபவரும், உலகின் குருவாக விளங்குபவரும், பக்தர்களுக்கு நன்மையைப் புகட்டுபவருமான குருவை மனம் சித்தமாவதற்கு வணங்குகிறேன்.
அத்வைதாநந்தபரிதம் ஸாதூநாமுபகாரிணம் |
ஸர்வ சாஸ்த்ரவிதம் சாந்தம் நமஸ்யே சித்தசுத்தயே ||
அத்வைத நிலையின் பேரானந்தத்தினால் திளைத்துள்ளவரும்,.நல்லோர்களுக்கு
விருப்பத்தை நிறைவேற்றுபவரும், எல்லா சாஸ்திரங்களையும் அறிந்தவரும்,
அமைதியே வடிவானவரும் ஆன குருவை மனம் சுத்தமாவதற்கு வணங்குகிறேன்.
கர்ம பக்தி ஞானமார்க ப்ரசாரே பத்த்தகங்கணம் |
அநுக்ரஹப்ரதாதாரம் நமஸ்யே சித்தசுத்தயே ||
கர்மா, பக்தி, ஞானம் -- என்ற
மூன்று வழிகளையும் (நடந்து காட்டி), மற்றவரும்
பிரசாரம் செய்வதில் முனைந்துள்ளவரும், எப்போதும் யாவர்க்கும்
அனுக்ரஹம் பண்ணுபவரும் (பார்வை, புன்முறுவல்,
பேச்சுக்களால்) ஆன குருவை மனம் சுத்தமாவதற்காக
வணங்குகிறேன்.
பகவத்பாத பாதாப்ஜ விநிவேசிதசேதஸ: |
ஸ்ரீ சந்த்ரசேகரகுரோ: ப்ரஸாதோ மயி ஜாயதாம் ||
ஆதிசங்கரரின் பாதகமலங்களில் ஈடுபட்ட மனதை உடையவரான ஸ்ரீ சந்திரசேகர குருவின் கருணை
கடாக்ஷம் என்னிடம் உருவாகட்டும்.
க்ஷேத்ர தீர்த்தகதாபிஜ்ஞ: ஸச்சிதானந்தவிக்ரஹ: |
சந்த்ரசேகரவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
ஒவ்வொரு புனிதஸ்தலம், தீர்த்தம் - முதலியவற்றின்
உண்மைக் கதைகளை அறிந்தவரும், ஸச்சிதானந்த வடிவமானவரும் ஆன ஸ்ரீ
சந்த்ரசேகரரான சிறந்த குரு எப்பொழுதும் என் மனதில் வசிக்கட்டும்.
போஷணே வேத சாஸ்த்ராணாம் தத்தசித்தமஹர்நிசம் |
க்ஷேத்ரயாத்ராரதம் வந்தே ஸத்குரும் சந்த்ரசேகரம் ||
வேதசாஸ்திரங்களை நங்கு வளரச் செய்யும் கார்யத்தில் அல்லும் பகலும் மனதைச் செலுத்தி
ஆலோசிப்பவரும் (பல திட்டங்களை உருவாக்கியவரும்) பற்பல புண்ணிய
க்ஷேத்ரங்களுக்கு பாதயாத்திரை செய்வதில் ஈடுபட்டவரும் (உண்மையில்
க்ஷேத்திரங்களுக்கே பெருமை ஏற்படுமாறு விஜயயாத்திரை அமைகிறது) ஆன ஸத்குரு ஸ்ரீ சந்திரசேகரரை வணங்குகிறேன்.
வேதக்ஞான் வேதபாஷ்யக்ஞான் கர்த்தும் யஸ்ய ஸமுத்யம: |
குருர்யஸ்ய மஹாதேவ: தம் வந்தே சந்த்ரசேகரம் ||
தகுதியுள்ளவர்களை வேதம் கற்றவர்களாயும், வேதம் கற்றவர்களை வேதப்பொருளை
அறிந்தவர்களாகவும் ஆக்கும் பணியில் முயற்சியுடையவரும், ஸ்ரீ மஹாதேவேந்த்ர
ஸரஸ்வதியைக் குருவாக உடையவரும் ஆன சந்திரசேகரரை வணங்குகிறேன்.
மணிவாசககோதாதி பக்திவாகம்ருதைர்ப்ருசம் |
பாலாநாம் பகவத்பக்திம் வர்த்தயந்தம் குரும் பஜே ||
மாணிக்கவாசகர், ஆண்டாள் முதலியோரின் பக்தி ததும்பும் பாட்டுக்களை பரப்புவதன் மூலம்,
குழந்தைகளுக்கும் கடவுள் பக்தியை வளர்ப்பவரான குருவை ஸேவிக்கிறேன்.
(திருப்பாவை, திருவெண்பாவை போன்ற பக்திப் பாடல்களை
மாணவர்களுக்கு மனப்பாடம் செய்விக்கும் போட்டிடகளை ஏற்படுத்தி, சிறுவர்களுக்கு பக்தியூட்டும் பணி இவர்களால் பல ஆண்டுகளாக செய்விக்கப்படுவது
இங்கு குறிக்கப்படுகிறது).
லகூபதேசைர் நாஸ்திக்யபாவமர்தநகோவிதம் |
சிவம் ஸ்மிதமுகம் சாந்தம் ப்ரணதோஸ்மி ஜகத்குரும் ||
எளிய யாவர்க்கும் மனதில் பதியுமாறு தெளிவான தன் தெய்வீகக் குரலின் (பேச்சுக்களால்)
உபதேசங்களால் நாஸ்திக்ய எண்ணங்களை அடியோடு அகற்றும் விஷயத்தில் நிகரற்றவரும்,
புன்னகை பூத்த முகத்தினால் மங்களங்களை அளிப்பவரும், சாந்திவடிவெடுத்தவருமான ஜகத்குருவை வணங்குகிறேன்.
விநயேந ப்ரார்த்தயேsஹம் வித்யாம் போதய மே குரோ |
மார்கமந்யம் ந ஜாநேsஹம் பவந்தம் சரணம் கத: ||
ஓ குருவே! நான் எனக்குக்
கல்வியை (ஆத்மஞானத்தை) போதிக்க வேண்டும்
என்று வணக்கத்துடன் வேண்டுகிறேன். எனக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. உம்மையே சரணம் அடைந்துள்ளேன்.
(அனுவாதம்: முல்லைவாசல் டாக்டர். ஆர். கிருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரி, வேதாந்தப் பேராசிரியர், ஸமஸ்கிருத கல்லூரி, சென்னை-4)
No comments:
Post a Comment