|| ஸ்ரீ குருப்யோ நம: ||
இந்த மங்களா சாஸனம் ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி மஹாஸ்வாமிகளுக்கு அவரது 80-வது ஜயந்தியின் போது "சாஸ்திர ரத்னாகர பண்டிதராஜ போலகம்" ஸ்ரீ ராம சாஸ்திரிகளால் இயற்றப்பட்டது.
சதாபிஷேக சங்க்யாத வயாம்ஸி ஹ்யதிஜக்மிவான் |
ஸ்ரீ சந்த்ரசேகர குரோ த்வம் ஜீவ சரத: சதம் ||
ஜய வருஷத்தில் பிறந்து தற்காலம் 80 வயதைக் கடந்த ஸ்ரீ சந்திரசேகறெந்திர சரஸ்வதி குரு அவர்களே தாங்கள் பல்லாண்டு ஜீவித்திருக்க வேண்டும் என்று பகவானைப் ப்ரார்த்திக்கிறோம்.
ஆசேதோரா ச காசீத: யாத்ரா பாவித பூதல |
தர்மோபதேச நிரத த்வம் ஜீவ சரத: சதம் ||
சேது முதல் காசி வரை பாதயாத்ரையாகவே சென்று எல்லா இடங்களையும் பாவனமாக்கி ஆங்காங்கு நல்ல தர்மங்களை உபதேசித்து வரும் ஹே குரோ! தாங்கள் பல்லாண்டு ஜீவித்திருக்க வேண்டும்.
ஸ்ரீமத் திருபுரசுந்தர்யா: ஸபர்யாகில பவ்யத |
பக்த சோகாதி வித்வம்ஸின் தம் ஜீவ சரத: சதம் ||
ஸ்ரீ காமாக்ஷி தேவியாகிய ஸ்ரீ மஹா திரிபுரசுந்தரியை மஹாமேரு பிரஸ்தார ஸ்ரீ சக்ர ஸ்வரூப யந்திரத்தில் பூஜை செய்து உலகிற்கு க்ஷேமத்தை அளித்தும் பக்தர்களின் சோகமோகங்களை விலக்கிக் கொண்டிருக்கும் ஹே குரோ! தாங்கள் பல்லாண்டு ஜீவித்திருக்க வேண்டும்.
ராமேஸ்வராதி ஸுக்ஷேத்ர ஸ்தாபிதாசார்ய மூர்த்திக |
அத்வைதாநந்த பரித த்வம் ஜீவ சரத: சதம் ||
ராமேஸ்வரம், கன்யாகுமரி, காஞ்சீ, ஸ்ரீசைலம், ஹ்ருஷிகேசம், குருக்ஷேத்திரம் முதலிய புண்ணியத் தலங்களில் ஸ்ரீ சங்கர பகவத் பாதரின் திவ்ய மூர்த்தத்தை நாங்கு சிஷ்யர்களுடன் ஸ்தாபித்து ஆச்சார்யாளால் பிரகாசப்படுத்தப் பட்ட அத்வைதானந்தத்தோடு பரிபூரணமாக விளங்கும் தாங்கள் பல்லாண்டு ஜீவித்திருக்க வேண்டும்.
பெரியவா சரணம்!
No comments:
Post a Comment