Monday, March 10, 2014

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு நவரத்னமாலா

|| ஸ்ரீ குருப்யோ நம: ||



விச்வேச தத்த-வர-முக்தி-ஸுமோக்ஷ-போக
-யோகாபித ஸ்படிகலிங்க ஸமர்ச்சனேன |
ஸர்வஜ்ஞபீட மதிருஹ்ய விஜித்யமிச்ரான்
ஸித்திம் ஸ்வகாச்ரம இயாய குருஸ்ஸ காஞ்ச்யாம் ||

இத்தம் ஸமீடிதகுணோ நவமேகிலாம்சே
அத்யாயேது ஷோகசதமே சரணம் குருர்ந: |
ஸ்ரீ சங்கரச் சிவரஹஸ்ய மஹேதிஹாஸே
ஸ்ரீ காமகோடி வரபீட பதிஸ்ஸ ஆத்ய: ||

"விச்வேச்வரனாகிய பரமசிவன் கொடுத்த வரம் - முக்தி-மோக்ஷம்-போதம்-யோகம் என்ற ஸ்படிக லிங்கங்களை பூஜித்து அந்த மஹிமையால் வசதிகளான மிச்ரர்களை ஜயித்து காஞ்சியில் வாக்தேவதா ரூபிணியான ஸ்வர்ண காமாக்ஷியின் சன்னதியில் உள்ள ஸர்வக்ஞ பீடத்தில் ஏறி காஞ்சியில் உள்ள தனது மடத்தில் ஸித்தி அடைந்தார்" என்ற சிவ ரஹஸ்யம் ஒன்பதாவது அம்சம் பதினாறாவது அத்யாயத்தில் கூறப்பட்டவரும் ஸ்ரீ காமகோடி பீடத்தின் முதலாவது அதிபதியுமான ஸ்ரீ சங்கராச்சாரியர் நமக்கு ஸரணம்.

கம்பாதீர நிவாஸினீ மனுதினம் காமேச்வரீ மர்சயன்
ப்ரும்மானந்த மவிந்தத த்ரிஜகதாம் க்ஷேமங்கரச் சங்கர: |
இத்யந்தே ஹ்யதி சங்கராப்யுதய காவ்யம் ராஜசூடாமணி:
யம்ப்ராஹாத்வரிவர்ய ஏஷ குருராட் காஞ்சீபுரஸ்தோவதாத் ||

ஸ்ரீ காஞ்சீ நகரத்தில் கம்பாதீரத்தில் வஸிப்பவளான காமாக்ஷி என்கிற காமேச்வரியான, மஹாத்ரிபுர ஸுந்தரீயை தினந்தோறும் பூஜித்துக்கொண்டும், அதனால் மூவுலகத்திற்கும் க்ஷேமத்தை அளித்துக் கொண்டும், ப்ரம்மனந்தத்துடன் இருந்தார் சங்கரர் என்ற சகராப்யுத்ய காவ்யத்தின் முடிவில் ராஜசூடாமணி தீக்ஷிதரால் கூறப்பட்ட ஸ்ரீ சங்கராச்சார்யர் காமாக்ஷியின் ஆலயத்தில் ஆறு சிஷ்யர்களுடன் திவ்ய மங்கள விக்ரஹ ரூபியாக உள்ளவர் நம்மைக் காப்பாற்றட்டும்.

கோவிந்த தேசிக முபாஸ்ய சிராய பக்த்யா
தஸ்மின்ஸ்த்திதே நிஜமஹிம்னி விதேஹ முக்த்யா |
அத்வைத பாஷ்ய முபகல்ப்ய திசோவிஜித்ய
காஞ்சீபுரே ஸ்திதி மவாப ஸ சங்கரார்ய: ||

இத்தம் பதஞ்ஜலி சரித்ரபரே ஸுகாவ்யே
ஸர்கே: கிலாஷ்டம உபாந்திம பத்யரத்னே |
ஸ்ரீராமபத்ர மகினோ கவிதல்லஜேன
நிர்திஷ்டமாதிம் குரும் சரணம் ப்ரபத்யே ||

தனது குருவான ஸ்ரீ கோவிந்த பகவத்பாதரை வெகு காலம் பக்தியுடன் உபாசித்து அவர் விதேஹ முக்தி அடைந்த பிறகு அத்வைத பரமான ப்ரஸ்தாந்த்ரய பாஷ்யங்களை இயற்றி திக்விஜயம் செய்து கடைசியில் காஞ்சீபுரத்தில் சங்கரர் தங்கினார் என்று ராமபத்ர தீக்ஷிதர் என்ற மஹாகவியால் பதஞ்ஜலி சரித்ரத்தை கூறவந்த மஹாகாவ்யத்தில் எட்டாவது சர்க்கத்தின் கடைசி ஸ்லோகத்திற்கு முதலாவதான் ஸ்லோகத்தில் கூறப்பட்ட ஆதிகுருவான சங்கரரை சரணமடைகிறேன்.

தக்ஷிண காஸ்மீராபித காஞ்சீ நகரஸ்த ஸர்வவித்பீடம் |
அதி ரூடோ வாதி ஜயீ ஜகத்குரு: பாது சங்கராசார்ய: ||

தென் காச்மீரம் என்று உலகில் பிரசித்தி வாய்ந்த காஞ்சீ நகரத்திலுள்ள வித்யா பத்ராஸனம் சாரதா பீடம் என்று கூறப்படும் ஸர்வக்ஞ பீடத்தின் வாதிகளை ஜயித்து ஏறியவரான ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யர் நம்மைக் காக்கட்டும்.

நேபால பூபஸ்ய வராக்ய லிங்க வரப்ரதம் தத்க்ருத பாதபூஜம் |
ஸ்ரீசங்கராசார்யமஹம் ப்ரபத்யே ஸ்ரீ காஞ்சி பீடப்ரதமாதிநாதம் ||

நேபாள தேசத்து அரசனுக்கு பசுபதி நாத் என்ற ஆலயத்தில் பூஜிக்கும்படி தான் கைலாஸத்திலிருந்து கொண்டு வந்த ஐந்து ஸ்படிக லிங்கங்களில் ஒன்றான வர லிங்கத்தைக் கொடுத்து அனுக்ரஹித்தவரும் அரசனால் பாத பூஜை செய்யப்பட்டவருமான ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடத்தின் முதலாவது அதிபதியுமான ஸ்ரீ சங்கராசார்யரை சரணமடைகிறேன்.

ஸ்ரீ சந்த்ரசேகர யதீந்த்ர ஸரஸ்வதீனாம்
சாந்தாந்தரங்க கலிதாகில பாவுகானாம் |
காஞ்சீ புரஸ்தித மஹோன்னத காமகோடீ
பீடீமுபாஸ்ரீதவதாம் சரணாவுபாஸே ||

ஸ்ரீ காஞ்சீபுரத்திலுள்ள பெருமை வாய்ந்த ஸ்ரீ காமகோடி பீடத்தின் 68-வது அதிபதியாகவும் ராஜத்வேஷமற்ற மனதில் உலகத்தின் க்ஷேமங்களையே எப்பொழுதும் சிந்தித்து அதற்குரிய காரியங்களைச் செய்பவருமாகிய ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமி பாதாளின் திவ்ய சரண கமலங்களை உபாஸிக்கிறேன்.

ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ராப்ச்ச ஜயேந்த்ராப்ச்சைவ ஸத்குரூன் |
ஸ்மராமஸ்ஸததம் சித்தே லோகக்ஷேம விதாயின: ||

உலக க்ஷேமங்களைச் செய்பவர்களான ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளையும் அவர்களது சிஷ்யர்களான ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளையும் எப்பொழுதும் மனதில் ஸ்மரிப்போமாக.

பெரியவா சரணம்!

No comments:

Post a Comment