Friday, March 7, 2014

வணக்கவுரை

|| ஸ்ரீ குருப்யோ நம: ||

ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு ரூபமாய் அவதாரம் செய்த இறைவன் இந்தக் கலியுகத்தில் ஆச்சார்ய ஸ்வரூபியாக அவதரித்து, அவனது ப்ரஜைகளான நாம் நல்வழியினில் வாழ்ந்து வாழ்வில் சகல நலங்களையும் பெற ஆவண செய்துள்ளான்.

அத்தகைய ஆச்சார்ய அவதாரங்களில் ஒன்றான ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவாளை பக்தி செய்யும் வகையில் ஆக்கப்பெற்ற ஸ்லோகத் தொகுப்பினை இங்கு வழங்க ஸ்ரீசரணர் என்றும் ஸ்ரீ மஹாஸ்வாமி என்றும் அனேக கோடி பக்தர்களாலும் அன்போடும் பக்தியோடும் அழைக்கப்படுகிற ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தினை அலங்கரித்த ஆச்சார்யர்களுல் 68-வது பீடாதிபதியாக பொறுப்பேற்ற ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் எனக்குத் தந்ததொரு மஹா பாக்கியமாகவே இதனைக் கருதுகிறேன்.

"மாதா, பிதா, குரு ஆகிய இந்த மூன்று பேர்களும் நமக்குப் ப்ரத்யக்ஷ தெய்வங்கள்.  மாதா பிதாக்கள் நம் தேகத்தைப் பொறுத்த மட்டும் ரக்ஷிப்பார்கள்.  ஆனால், இந்தத் தேகம் திரும்பியும் திரும்பியும் ஜென்மம் எடுக்கக் காரணமாகிறது.  சம்சாரமெங்கிறது ஒரு பெரிய வியாதி.  அதிலிருந்து தப்பிக்க, குரு உபகாரம் பண்ணமுடியும்.  எக்காலத்திலும் வியாதி இல்லாத நிலையைக் கொடுக்க, குரு ஒருவரால் தான் முடியும்.  அவர்தான் நம்மைக் கரையேற்ற முடியும்.  குருவிடம் பக்தி பண்ணினால் வேண்டியதெல்லாம் கிடைக்கும்.  நம் மாத, பிதாவை வணங்கித் தொழுத பின்னர், சாக்ஷாத் பகவத் ஸ்வரூபமான குருவினை வணங்கித் தொழும்போது தான் குருவானவர் அதனை ஏற்றுக் கொண்டு நமக்கெல்லாம் அருள்பாளிக்கிறார்" - ஸ்ரீ மஹாபெரியவர்.

கலியுகத்தில் அவதரித்த ஸ்ரீபரமேஸ்வர ஸ்வரூபியான ஸ்ரீ மஹாஸ்வாமிகளைக் குறித்த ஸ்லோகங்கள், ஸ்தோத்திரங்கள், அவரை பூஜிக்க வல்ல நாமாவளிகள் இப்படியாக நானறிந்த விஷயங்களை அகிலவுலக ஆன்மீக உறவுகள் யாவருக்கும் சென்றடையும் வகையில் என்னாலானதொரு கடுகத்தனை முயற்சியே இந்தப் பதிவுகள்.

அனைவருக்குமாக இவை பயன்பட்டு, அனைவருக்கும் குருக்ருபை கிட்டி தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்க வல்லதொரு கடாக்ஷம் அருளவேண்டி ஸ்ரீமஹாஸ்வாமியின் பொற்பாதங்களில் நமஸ்கரிக்கின்றேன்.

இங்குள்ள பதிவுகளில் பிழைகளேதுமிருப்பின் அருட்கூர்ந்து அன்பர்கள் அதனை எனக்கு hdfcsuresh@hotmail.com எனும் ஈமைலுக்குத் தொடர்புகொண்டு தெரிவித்தால் திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.  அதுமட்டுமல்லாது, ஸ்ரீ மஹாஸ்வாமி குறித்த வேறேதும் ஸ்லோகங்களோ, ஸ்தோத்திரகங்களோ தங்களுக்குத் தெரிந்திருப்பின் அதனையும் எனக்குத் தெரிவித்து அகிலலோக உறவுகள் அனைவருக்கும் அதனைப் பகிரும் மஹாபாக்கியத்தில் தாமும் பங்கேற்கவேண்டி வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.

             
                           மாதா பிதாகொண்டே பிறப்பிதனைப் பெற்றிடினும்
                           நோகா நிலைகொள்ள ஆச்சார்யன் அருள்பெற்றே
                           வாடா முருவினைபோல் வாழ்விதனில் இன்பயக்க
                           நாடா திருப்போமோ சங்கரனின் திருப்பாதம்!


பெரியவா சரணம்!                                                                  - சாணு புத்திரன்.

3 comments:

  1. தாங்கள் அரும்பெரும் தவப் புதல்வர். இல்லையென்றால் மஹா பெரியவாளுக்கு இப்பேர்ப்பட்ட தொண்டு செய்யும் பாக்கியம் கிட்டியிருக்குமா......

    ReplyDelete
  2. Aasukaviyaaka Bhakthi Pravaaham Maha Periyavaa AruLaal Eppoothum ThangkaL
    Vaakkilirunthu VeLippadum! Maha Saraswathi Devi Kadaaksham ThangkaLukkup ParipuuraNamaakak Kidaikkap PiraarththikkiReen! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

    ReplyDelete
  3. ஆச்சார்யம் போதித்ததை உலகறிய செய்ய வந்த அருந்தவப் புத்திரரே தங்கள் பணி யுஹம் யுகமாக தொடர குருவருள் புரிவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதில் ஒரு சிறு சிறு துளியாவது தொண்டுக்கு என்னையும் குருவருள் எனக்கு
    இருந்தால் அருள்வீர்.

    ReplyDelete